பயணியின் கைபேசியை எடுத்த 'உபர்' ஓட்டுநருக்கு 3 வார சிறை

பயணியின் கைபேசியை எடுத்த 'உபர்' ஓட்டுநருக்கு 3 வார சிறை

1 mins read
Google News Preferred Icon

உபர் வாகனத்தில் சென்ற ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி பயணம் சென்ற டான் கோக் பூன் என்பவர் தமது கைபேசியை மறந்து விட்டுச் சென்றுவிட்டார். மறுநாள் தமது கைபேசி காணாததைக் கண்ட திரு டான் தாம் உபர் வாகனத்தில் பயணம் செய்யும் போது கைபேசியில் பேசியதை நினைவுகூர்ந்தார். இதன் தொடர்பில் போலிசில் புகார் செய்தார் திரு டான். உபர் மூலம் அப்பொழுது திருஜயன் சுப்பிரமணியம் என்பவர் தான் திரு டானை அவர் வசிக்கும் இடத்திற்கு கொண்டு சென்றதை கண்டுபிடித்த போலிசார் அடுத்தவர் பொருளை தனதாக்கிக்கொண்டதாக திரு ஜயன் சுப்பிரமணியம் மீது குற்றச்சாட்டு சுமத்தினர்.