அரிய பறவைகளின் அரிய காட்சிகளைப் படமாக்க குவிந்த புகைப்படக் கலைஞர்கள்

அரிய பறவைகளின் அரிய காட்சிகளைப் படமாக்க குவிந்த புகைப்படக் கலைஞர்கள்

1 mins read
1c6e909c-5bf5-49ca-9d67-9d5d7b97144a
-

இந்த புகைப்படக்காரர்கள் திரை நிகழ்ச்சியையோ காற்பந்தாட்ட விளையாட்டையோ புகைப்படம் எடுப்பவர்கள் போல தோன்றலாம். கடந்த வாரத்திலிருந்து சுமார் 20 புகைப்படக்காரர்கள் பெக் கியோ ஈரச் சந்தை, உணவு நிலையத்திற்கு எதிரே ஒரு மரத்தில் உள்ள ஓட்டையை உற்றுப் பார்த்தவாறு மணிக்கணக்காக காத்திருந்தனர். இதெல்லாம் நகர்ப்பகுதியில் கிளிகளையும் பறவை குஞ்சு களையும் புகைப்படக் கருவிகளால் படம் பிடிப்பதற்காகத்தான். உச்சந்தலையில் நீல நிறம் கொண்ட கிளிகள் மரத்திலிருந்து வெளியே பறக்கும்போது அந்த அரிய காட்சியை ஆரவாரத்துடன் உடனே படம்பிடிக்க புகைப்படக் காரர்கள் விழிப்புடன் உள்ளனர்.