தனியார் அடுக்குமாடி வீட்டு விலை உயர்வு

தனியார் அடுக்குமாடி வீட்டு விலை உயர்வு

1 mins read
a7e63172-6fe0-47ec-811d-2b2ac09c979c
-

தனியார் அடுக்கு மாடி வீடுகளின் வீட்டு விலை கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத வகையில் தொடர்ந்து 5 மாதங்களாக உயர்ந்துள்ளது. இதனை எஸ்ஆர்எக்ஸ் சொத்து முகவை நிறுவனத்தின் மதிப்பீட்டு ஆய்வு தெரிவிக்கிறது. அந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி கடந்த மாதம் தனியார் வீடுகளின் விற்பனைக் குறியீடு 168.8 ஆக உயர்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பின் தனியார் வீடுகளின் விற்பனை இவ்வளவு உயர்ந்தது இதுவே முதல் முறை. தனியார் அடுக்கு மாடி வீடுகளின் விற்பனை கடந்த மாதத்தில் இருந்து 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதுபோன்ற வீடுகளை வாங்க பல மாதங்களாகக் காத்திருந்தோர் சந்தை மதிப்புக்கு மேல் ரொக்கம் கொடுத்து வாங்குவதற்கு பலர் முன்வந்ததை யடுத்து விற்பனை விழுக்காடு கிடுகிடுவென உயர்ந் த தாகக் கூறப்படுகிறது.