போக்குவரத்து விதிமீறல்: சிங்கப்பூர் வாகனமோட்டிகளை தேடி வரும் ஜோகூர் போலிஸ்

போக்குவரத்து விதிமீறல்: சிங்கப்பூர் வாகனமோட்டிகளை தேடி வரும் ஜோகூர் போலிஸ்

1 mins read

போக்குவரத்து விதிகளை மீறிய தால் அழைப்பாணை பெற்று, இன் னும் அபராதம் கட்டாமல் இருக்கும் சிங்கப்பூர் வாகனமோட்டிகளைப் பிடிக்கும் பணியில் ஜோகூர் போலிசார் தீவிரமாக இறங்கியுள்ள தாக ஜோகூர் போக்குவரத்து போலிஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார். 2010 முதல் போக்குவரத்துக் குற்றங்களுக்காக சிங்கப்பூர் வாகனமோட்டிகளுக்கு 160,000 அழைப்பாணைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவற்றில் 25 விழுக்காட்டிற்கும் குறைவான சம் பவங்களில் மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் திரு முக்தார் கூறினார். இன்னும் 134,227 அழைப்பாணை களுக்கான அபராதத் தொகை நிலுவையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.