பிரதமர்: முதல் காலாண்டு பொருளியல் வளர்ச்சி ஊக்கமளிக்கிறது

பிரதமர்: முதல் காலாண்டு பொருளியல் வளர்ச்சி ஊக்கமளிக்கிறது

1 mins read

இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் சிங்கப்பூர் கண்டி ருக்கும் பொருளியல் 2.5% வளர்ச்சி ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்திருந்தார். வரும் மே தினப் பேரணி உரையில் தாம் இது குறித்து பேசவிருப்பதாகவும் அவர் கூறினார். "வெவ்வேறு துறைகளில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள இந்த வாரத்தில் இரு மதிய உணவு சந்திப்புகளின்போது தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் துறைமுக ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், நிபுணர்கள் என பல பிரிவின ரையும் பிரதிநிதிப்பவர்கள். "தாங்கள் சந்திக்கும் சவால்கள், வரவிருக்கும் மாற்றங் களுக்கு ஏற்ப தங்களை எப்படி தயார்ப்படுத்திக் கொள்ள லாம் என்று ஊழியர்களுக்கு உதவுதல் போன்றவை பற்றி தொழிலாளர் தலைவர்கள் பேசினார்கள்," என்று திரு லீ விவரித்தார்.