கைதிகளின் விவரங்களை ஒரு நொடியில் பதிவு செய்து, சிறை நிர்வாகச் செயலமைப்பில் படங்கள் உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற் றக்கூடிய கையடக்க சாதனங் களைச் சிறை அதிகாரிகள் இப் போது பயன்படுத்துகின்றனர். 2018ஆம் ஆண்டுக்குள், கைதி களின் மணிக்கட்டுப் பட்டையில் பதிக்கப்பட்ட 'சில்'லின் மூலம் அவர்கள் வேலை செய்யும்போது, ஆலோசனை அல்லது மறுவாழ்வுத் திட்டங்களில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் இருக்கும் இடத்தை அதிகாரிகள் கண்கா ணிக்க முடியும். நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் சிறைச்சாலைத் துறையின் வரு டாந்தரப் பணித்திட்டத்தில் விவ ரிக்கப்பட்ட "காவலர் இல்லா சிறை" உருமாற்றத்தின் ஒரு பகு தியாக இந்தத் தொழில்நுட்ப முனைப்புகள் மேற்கொள்ளப்படு கின்றன.
கைதிகளின் மணிக்கட்டுப் பட்டையில் பதிக்கப்பட்ட 'சில்'லின் மூலம் அவர்களின் நடமாட்டத்தை சிறை அதிகாரிகள் தங்கள் கையடக்க சாதனங்கள் மூலம் கண்காணிக்கலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

