கனமழையால் சாலையில் தேங்கிய மழை நீர்

கனமழையால் சாலையில் தேங்கிய மழை நீர்

1 mins read
0335a841-3eff-415f-98d7-ed9ba87031af
-

நேற்று பெய்த கனமழை காரணமாக சிங்கப்பூரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் போன்ற காட்சிகளைக் காண முடிந்தது. அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் நீதிமன்றத்திற்கு வெளியே சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரைப் பிளந்தவாறு ஓடும் வாகனங்கள். கனமழை காரணமாக தஞ்சோங் பகார் ரோடு, கிரெய்க் ரோடு ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது பொதுப் பயனீட்டுக் கழகம். கேவனா ரோட்டில் நேற்று பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அதன் காரணமாக அந்தச் சாலையின் ஒரு தடம் போக்குவரத்துக்கு சிறிது நேரம் மூடப்பட்டது. பின்னர் தேசிய பூங்கா கழக ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை பல துண்டுகளாக்கி அப்புறப்படுத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்