செம்மரக் கட்டை வழக்கு: முதலாளிக்கு 3 மாதச் சிறை, $1 மில்லியன் அபராதம்

செம்மரக் கட்டை வழக்கு: முதலாளிக்கு 3 மாதச் சிறை, $1 மில்லியன் அபராதம்

1 mins read

சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவருக்கு U$50 மில்லியன் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை உரிமமின்றி மடகாஸ்கரில் இருந்து இறக்கு மதி செய்ததற்காக 3 மாதச் சிறைத் தண்டனையும் $500,000 அபராதமும் விதிக்கப்பட்டது. வோங் வீ கியோங் என்ற அந்த வர்த்தகரின் கோங் ஹு என்ற நிறுவனத்திற்கு $500,000 வெள்ளியும் ஆக மொத்தம் ஒரு மில்லியன் வெள்ளி அபராதம் விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜூரோங் துறைமுகத் திற்கு வந்த ஒரு படகில் இருந்து 29,000க்கும் மேற்பட்ட செம்மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மொத்த எடை 3,235 டன். இதுவரையில் இந்த அளவு அதிகமான செம்மரக் கட்டைகள் எந்த ஒரு நாட்டிலும் கைப்பற்றப்பட வில்லை என்று கூறப்படுகிறது.