விமானப் போக்குவரத்தை வழிநடத்துவதில் புதிய தொழில்நுட்பம்

விமானப் போக்குவரத்தை வழிநடத்துவதில் புதிய தொழில்நுட்பம்

1 mins read

இனிவரும் ஆண்டுகளில் விமானங்களைப் பார்க்காமலேயே, கண்ணாடியில்லாத அறையில் அமர்ந்து விமானப் போக்கு வரத்தை வழிநடத்தவுள்ளது சாங்கி விமானம் நிலையம். இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் முக்கிய விமான நிலையங்களில் சிங்கப்பூர் முதன்மையாகத் திகழும் என்று சிங்கப்பூர் சிவில் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. "அறிவார்ந்த விமானக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத் தின் மூலம் சாங்கியின் விமானப் போக்குவரத்தை மேலும் சீராக நிர்வகிக்கலாம். இதனால், பயணிகளுக்கு ஏற்படும் காலதாமதம் குறைவதுடன் விமானச் சேவை நிறுவனங் களுக்கு ஆகும் பெட்ரோல் செலவும் குறையும்," என்றார் ஆணையத்தின் தலைமை இயக்குநர் கெவின் சம்.