தொடக்கநிலை ஒன்றாம் வகுப் பில் அடுத்த ஆண்டு குழந்தை களை சேர்ப்பதற்கான பதிவு ஜூன் 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நடைபெறும் என கல்வி அமைச் சின் இணையத்தளம் தெரிவிக் கிறது. 2011ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கும் 2012ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் இடையில் பிறந்த குழந்தைகள் தொடக்கப் பள்ளி சேர்க்கைக்குப் பதிவு செய்துகொள்ளலாம். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும் பும் தொடக்கப் பள்ளிகளுக் கான பதிவை பட்டியலிடப்பட்ட நாட்களில் காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள் தங்களது குழந்தைகளைத் தொடக்கநிலை ஒன்றில் சேர்ப்பது குறித்து அமைச்சின் இணையத் தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
தொடக்கநிலை 1 பதிவு ஜூன் 29ல் தொடக்கம்
1 mins read

