போலி தங்கப் பாளங்களை அடகுவைத்தவருக்கு ஓராண்டுச் சிறை

போலி தங்கப் பாளங்களை அடகுவைத்தவருக்கு ஓராண்டுச் சிறை

1 mins read

போலியான 19 தங்கப் பாளங் களை அடகு வைத்து அடகுக் கடைகளிலிருந்து தான் பெற்ற $33,000 தொகையைச் சதிக் கும்பல்காரர் ஒருவரிடம் கொடுத்த 22 வயது ஆடவருக்கு நேற்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கோழி, வாத்து வியாபாரியான ஆல்டி ஹுன் ஜென் போ என்ற அந்த ஆடவர், ஆ கிம் என் பவருடன் சேர்ந்து சதிசெய்து அடகுக் கடைகளை ஏமாற்றியதாகக் கூறும் இரண்டு குற்றச் சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு செப்டம்பரில் வேறோர் அடகுக் கடையை ஏமாற்ற முயன்றதாகக் கூறும் மற்றொரு குற்றச்சாட்டின் பேரி லும் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். போலியான தங்கப் பாளங்களைக் கையாளும் ஒரு கும்பலுக்கு உதவுவதற்காக ஹுன் வேலையில் அமர்த்தப்பட் டார் என்று விசாரணையில் தெரி விக்கப்பட்டது.