தீவிரவாத மனபோக்கைத் தடுக்க பெண்களுக்கு முக்கியமான பங்கு

தீவிரவாத மனபோக்கைத் தடுக்க பெண்களுக்கு முக்கியமான பங்கு

1 mins read

தீவிரவாத சித்தாந்த மனப்போக் கைத் தடுப்பதில் பெண்களுக்கு முக்கிய பணி இருக்கிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். பயங்கரவாதம் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்றில் நேற்று சுமார் 50 சமய ஆசியரியர்களும் மலாய் முஸ்லிம் சமூகத் தலைவர்களும் சமய மறுவாழ்வு குழு உறுப்பினர் களும் கலந்துகொண்டனர். பயங்கரவாதிகளின் கவர்ச்சி வலையில் பெண்கள் எப்படியெல் லாம் சிக்கிக்கொள்கிறார்கள் என் பதை ஆராய வேண்டியதும் தீவிர வாத சித்தாந்த மனப்போக்கைத் தடுப்பதில் பெண்கள் ஆற்றக்கூடிய பங்கைப் புரிந்துகொள்வதும் உயிர் நாடியானவை என்று அந்தக் கருத் தரங்கில் தெரிவிக்கப்பட்டது. மத்திய கிழக்கில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பெண்கள் சேர்ந்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பெண்கள் சேர்ந்து வாழ முடியும் என்றும் பயங்கரவாதிகள் செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று அந்த பிரத்தியேகக் கருத்தரங்கில் தெரி விக்கப்பட்டது.