கஞ்சா பறிமுதல்; மூவர் கைது மத்தியப் போதைப்பொருள்

கஞ்சா பறிமுதல்; மூவர் கைது மத்தியப் போதைப்பொருள்

1 mins read
Google News Preferred Icon

ஒழிப்புப் பிரிவு கிட்டத்தட்ட ஒரு கிலோகிராம் கஞ்சாவையும் மற்ற போதைப்பொருட்களையும் பறி முதல் செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சாவின் மதிப்பு கிட்டத்தட்ட $10,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. 'ஹெராயின்', 'ஐஸ்' உட்பட மற்ற போதைப்பொருட்களும் தெம்ப னிஸ் வட்டாரத்தில் அதிகாரிகள் நேற்று முன்தினம் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டன என்று மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. தெம்பனிஸ் ஸ்திரீட் 86ல் நேற்று முன்தினம் போதைப் புழங்கிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் ஒன்றாக இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த இரு சந்தேக நபர்களும் பின்னர் பிரிந்துசென்று அவரவர் வாகனங்களில் ஏறினர்.