கண்மூடித்தனமாகச் சென்ற கனரக வாகனம்; உயிர் தப்பிய பாதசாரிகள்

கண்மூடித்தனமாகச் சென்ற கனரக வாகனம்; உயிர் தப்பிய பாதசாரிகள்

1 mins read

கனரக வாகனமொன்று கண்மூடித்தனமாகச் சென்றதால் அவ்வழியே நடந்து சென்ற இரண்டு பாதசாரிகள் மீது மோதவிருந்து, பின்னர் அங்கிருந்த போக்குவரத்து விளக்குக் கம்பங்களில் மோதியது. இந்தச் சம்பவம் ஜூரோங்கின் பைனியர் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு நடந்தது. இதை அவ்வழியே வாகனம் ஓட்டிச் சென்ற திரு கேரி லீ என்பவரின் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த புகைப்படக்கருவி பதிவுசெய்தது. இந்தக் காணொளி 'ரோடு.எஸ்ஜி'=யின் ஃபேஸ்புக் தளத்தில் நேற்று முன்தினம் பதிவேற்றப்பட்டது. அந்தக் காணொளியைப் பார்வையிட்ட பலரும் கனரக வாகனமோட்டியைச் சாடியிருந்தனர். போக்குவரத்து பைனியர் ரோடு, இன்டர்நேஷனல் ரோடு சந்திப்பில் நடந்த இந்த மோதலில் சமிக்ஞை விளக்குகள் உடைந்திருந்ததை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் பார்வையிட்டு அது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.