ரஷ்யாவிடம் ரகசியங்களை டிரம்ப் வெளியிட்டார்; அதிகாரி மறுப்பு

ரஷ்யாவிடம் ரகசியங்களை டிரம்ப் வெளியிட்டார்; அதிகாரி மறுப்பு

1 mins read

வா‌ஷிங்டன்: ஒவ்வொரு நாளும் புதுப் புதுப் பிரச்சினைகளுக்கு எதிராக போராடிவரும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றொரு பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக் கிறார். அமெரிக்காவின் பரம ரகசியங் களை ரஷ்யாவிடம் அவர் வெளி யிட்டுவிட்டார் என்பதே அது. ஆனால் இதனை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. கடந்த வாரம் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் வையும் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் செர்கே கிஸ்லியாக் கையும் அதிபர் டிரம்ப் வா‌ஷிங் டனில் சந்தித்துப் பேசினார்.

அப்போது ஐஎஸ் அமைப்பு பற்றிய மிகவும் ரகசியம் என்று வகைப்படுத்தப்பட்ட தகவல்களை அதிபர் டிரம்ப் அவர்களிடம் வெளியிட்டார் என்று வா‌ஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட கட்டுரை குறிப்பிட்டது. இந்த ரகசிய உளவுத் தகவலை நெருங்கிய வட்டாரம் ஒன்று அமெரிக்காவிடம் தெரிவித் திருந்தது. ஆனால் இதனை வெளியிட அது அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் ரகசியத் தக வலை ரஷ்யாவிடம் திரு டிரம்ப் கூறிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மறுத்துப் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்ஆர் மெக்மாஸ்டர், "இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள பொதுவான மிரட்டல்கள் பற்றி டிரம்ப்பும் லாவ்ரோவ்வும் பேசினர்," என்றார்.