ரயில் நிலையத்தில் பையை வைத்துவிட்டுச் சென்ற ஆடவர் மீது குற்றச்சாட்டு

ரயில் நிலையத்தில் பையை வைத்துவிட்டுச் சென்ற ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read

ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்தில் சென்ற மாதம் ஒரு பையை வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் ஆடவர் மீது பொதுமக்களுக்குத் தொல்லை ஏற்படுத்தியதாக நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. வாங் ஜியான்போ, 39, என்ற சீன நாட்டு ஆடவர் ஏப்ரல் 2ஆம் தேதி பிற்பகல் 2.25 மணிக்கும் 2.45 மணிக்கும் இடையில் ரயில் நடைமேடையில் தன்னுடைய நீலநிறப் பையை வைத்துவிட்டுச் சென்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. குற்றவாளி என்று தீர்ப்பானால் இவருக்கு $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அந்தச் சம்பவம் நிகழ்ந்த நாளன்று ஹவ்காங் எம்ஆர்டி நிலையம் 1 மணி நேரம் மூடப் பட்டது. போலிஸ் வரவழைக்கப்பட்டு பை சோதிக்கப்பட்டது.