ஈஸ்வரன்: சிங்கப்பூர்-இந்தியா உறவுக்கு அமராவதி நகர்த் திட்டம் பலன்தரும் உரம்

ஈஸ்வரன்: சிங்கப்பூர்-இந்தியா உறவுக்கு அமராவதி நகர்த் திட்டம் பலன்தரும் உரம்

1 mins read
fa4500a3-4f45-44e9-84f6-987e8188adf2
-

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியை உருவாக்குவதில் சிங்கப்பூர் ஈடுபட்டு வருகிறது. இந்த ஈடுபாடு, இந்தியாவில் சிங்கப்பூர் தன்னுடைய ஈடுபாட்டை விரிவுபடுத்த உதவுவதோடு இரு தரப்பு உறவு பலமடையவும் கை கொடுக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் தெரிவித்தார். இந்தியாவுக்குப் பயணம் மேற் கொண்டிருந்த திரு ஈஸ்வரன், திங்கட்கிழமை சிங்கப்பூர் கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு கடிதம் வழங் கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அமராவதி நகரின் வர்த்தக மையத்தை உருவாக்குவதற்காக அந்தக் கடிதம் சிங்கப்பூர் கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் அசண் டாஸ் சிங்பிரிட்ஸ் மற்றும் செம்ப் கார்ப் டெவலப்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் அங்கம் வகிக்கின் றன. அமராவதி திட்டம் ஒரு பெருந்திட்டம் என்பதால் இரு நாடுகளுக்கு இடைப்பட்ட இரு தரப்பு உறவுக்கு அது மிகவும் உதவும் என்று அமைச்சர் சிங்கப் பூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

ஆந்திராவில் ஃபுட் எம்பரர் நிறுவனத் திடலில் வர்த்தக தொழில் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மரக்கன்று நட்டார். படம்: ஐஇ சிங்கப்பூர்