குதிரை சவாரி சேவை வழங்கி வரும் கேலோப் ஸ்டேபிள் என்னும் நிறுவனத்திற்கு குதிரையைச் சரியாகப் பராமரிக்- காததால் நேற்று $9,000 அபராதம் விதிக்கப்பட்டது. அந் நிறு வ னத்தின் பேராளர் திருமதி எம்.சங்கர், நேற்று அந்த அபராதத் தொகையைச் செலுத்தினார். அந்த நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வுள்ளது. பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் குதிரை லாயத்திற்கு திடீரென வருகை மேற்கொண்ட வேளாண்=உணவு, கால்நடை மருத்துவ ஆணைய அதிகாரி கள் அங்கு குதிரைகள் சரியான பராமரிப்பின்றி இருந்த- தைக் கண்ட னர். 2013 மே 15ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக குதிரைக்கு தேவையில்லாத வகையில் வேதனை- யைக் கொடுத்ததாக கேலோப் ஸ்டேபிள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. 8 நாட்களாக நடந்த விசாரணைக் குப் பின் நேற்று இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
குதிரையை சரியாக பராமரிக்காத சவாரி சேவை நிறுவனத்திற்கு $9,000 அபராதம்
1 mins read

