அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதராக கே. டி. மெக்ஃபர்லண்டை நியமித்து இருக்கிறார். இந்த மாது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துணை ஆலோசகராக நியமிக் கப்பட்டு நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. அந்தப் பதவியிலிருந்து இவரை அகற்றிய அதிபர், இவரை சிங்கப்பூருக்கான தூதராக நியமித்து இருக்கிறார். முன்னாள் நாடாளுமன்ற நாயகரும் டிரம்ப் ஆதரவாளருமான நியூட் கிங்ரிச்சின் மனைவியான கலிஸ்தா கிங்ரிச்சை வத்திக்கனுக்கான தூதராக அமெரிக்க அதிபர் நியமித்தார். திரு டிரம்ப் ரோமில் மே 24ஆம் தேதி போப் பிரான்சிசை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூருக்கான தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் கே. டி. மெக்ஃபர்லண்ட்.

