சாங்கி விமான நிலையத்தில் ஆட்களையும் பொருட்களையும் நகர்த்துதல் மேலும் எளிமையாக் கப்பட்டுள்ளது. அதன் தொடர்பில் நேற்று விவேக சக்கர நாற்காலி களும் வாகனங்களும் அறிமுகப் படுத்தப்பட்டன. தற்போது விமான நிலையத் தில் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் அதை அவர் கள் இயக்க வேண்டும் அல்லது மற்றவர்கள் அவர்களைத் தள்ளிக் கொண்டு போக வேண்டும். புதிய சோதனை முறையின்படி, பயணி ஒருவர் அமர்ந்துள்ள விவேக சக்கர நாற்காலியில் உள்ள ஒரு பொத்தானை விமான நிலைய ஊழியர் அழுத்திவிட்டுச் செல்வார். உணர்கருவி, மென் பொருளின் உதவியுடன் விவேக சக்கர நாற்காலி அந்த ஊழியரைப் பின் தொடரும். பின்னால் வரும் இதர சக்கர நாற்காலிகளும் முத லில் செல்லும் சக்கர நாற்காலி யைப் பின் தொடரும் (படம்).
சாங்கி விமான நிலையத்தில் விவேக சக்கர நாற்காலிகள், வாகனங்கள்
1 mins read
-

