நாடளாவிய உணர்கருவி கட்ட மைப்பு, மின்-அடையாளம், மின்- கட்டணமுறை போன்ற அறிவார்ந்த தேச திட்டப்பணிகளை நிறைவேற்ற ஆயத்தப்படுத்திவரும் சிங்கப்பூர், சென்ற ஆண்டின் சாதனையளவு நிதி ஒதுக்கீட்டுக்குச் சற்றே குறை வான தொகையை இவ்வாண்டு அறிவித்துள்ளது. இவ்வாண்டு மொத்தம் $2.4 பில்லியன் மதிப்புள்ள தொழில்நுட்ப ஏலக்குத்தகைகள் வழங்கப்படும். தரவுப் பகுப்பாய்வு மென்பொருள், உணர்கருவிகளையும் தரவு நிலை யங்களையும் இணைக்கும் தொடர்புச் செயலமைப்பு போன்ற வற்றில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது. "அறிவார்ந்த தேசம், மின்னி லக்க அரசாங்கத்தின் அடிப் படையை" நிர்மாணிப்பதற்காக, கட்டமைப்பு, கம்பிவட இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை அமைக்கும் திட்டப்பணிகள் சென்ற ஆண்டின் நிதி ஒதுக் கீட்டுடன் ஈடேறி வருவதாக அர சாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் தலைமை நிர்வாகி குமாரி ஜாக் லின் போ தெரிவித்தார்.
அறிவார்ந்த தேச உணர்கருவி செயலமைப்பின் ஒரு பகுதியாக $2.4 பில்லியன் முதலீடு இடம்பெறும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

