சாலையின் நடுவே விழுந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பெரிய மரக்கிளையைச் சாலையோரத் துக்கு அப்புறப் படுத்திய மோட் டார்சைக்கிளோட்டி ஒரு வரின் செயலை எழுத்தாளரும் கேலிச்சித்திர வரைபடக் கலைஞர் ஓட்டோ ஃபோங் நேற்றுக் காலை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். திரு ஃபோங் தனது பதிவில், "மழை பெய்த காலை வேளையின் வீரர். ஜாலான் புக்கிட் மேராவில் தனது மோட் டார்சைக்கிளிலிருந்து இறங்கி, சாலையில் கிடந்த பெரிய மரக்கிளையை அப்புறப்படுத்தினார்.
தான் பயணம் செய்த ஈரடுக்குப் பேருந்திலிருந்து திரு ஃபோங் இந்தப் புகைப்படத்தை எடுத்தார். சம்பந்தப்பட்ட அமைப்புகள் அந்த இடத்துக்கு வந்து அந்தப் பெரிய மரக் கிளையை அப்புறப்படுத்த எவ்வளவு நேரம் பிடித்திருக்கும் என்று தான் எண்ணியதாக திரு ஃபோங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். "அந்த மோட்டார்சைக்கிளோட்டி மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்," என்று திரு ஃபோங் கூறிய கருத்தை ஆதரித்த மற்றொரு ஃபேஸ்புக் பயனாளி திரு பென் புவா, "அவ்வப்போது இவர் போன்ற அமைதியான வீரர்களை நாம் காணமுடிகிறது. மற்றவர்க ளுக்காகக் காத்திருக்காமல், தானே முன்வந்து ஒரு செயலை யதார்த்தமாக இவர் செய்துள்ளது பாராட்டுக்குரி யது" என்று தெரிவித்தார்.
ஜாலான் புக்கிட்மேரா சாலையில் விழுந்துகிடக்கும் மரக்கிளையை அகற்றும் பணியில் ஈடுபட்ட மோட்டார்சைக்கிலோ சைக்கிளோட்டி. படம்: ஃபேஸ்புக்.

