குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஹாவர்ட் ஷாவுக்குச் சிறை, அபராதம், தடை

குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஹாவர்ட் ஷாவுக்குச் சிறை, அபராதம், தடை

1 mins read

குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காகப் பிரபல ஷா குடும்பத்தைச் சேர்ந்த ஹாவர்ட் ஷாவுக்கு நேற்று எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. அவருக்கு 10,000 வெள்ளி அபராதமும் வாகனம் ஓட்ட எட்டு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதியன்று அதிகாலை 3.45 மணி அளவில் விட்லி சாலையில் கார் ஓட்டிச் சென்றுகொண்டிருந்த ஷாவர்ட் ஷாவை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது மூச்சுக் காற்றில் 88 மைக்ரோகிராம் ஆல்கஹால் இருந்ததை அதிகாரி கள் கண்டுபிடித்தனர். மூச்சுக் காற்றில் 35 மைக்ரோகிராமுக்கும் அதிகமான ஆல்கஹால் இருந்து வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். ஹாவர்ட் ஷா குடிபோதையில் வாகனம் ஓட்டும் குற்றத்தைப் புரிவது இதுவே மூன்றாவது முறை. இந்தக் குற்றத்தை அவர் 1997, 2006ஆம் ஆண்டுகளிலும் புரிந்துள்ளார் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் உறுதி செய்தன.