இந்து ஆலோசனை மன்றம், இந்து அறக்கட்டளை வாரியத்தின் புதிய நிர்வாகக் குழு

இந்து ஆலோசனை மன்றம், இந்து அறக்கட்டளை வாரியத்தின் புதிய நிர்வாகக் குழு

1 mins read
16c2efaa-14ca-493e-a725-4bdfc60e3d15
-

இந்து அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை மன்றம் ஆகியவற்றின் நிர்வாகக் குழுக்களுக்குப் புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ செவ்வாய்க் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவிக் கடிதங்களை உறுப்பினர் களுக்கு வழங்கினார். சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் 'நடக்குமா' என்பதை விட 'எப்போது நடக்கும்' என்பதைத்தான் எஸ்ஜி செக்யூர் நமக்கு நினைவுபடுத்துகிறது என்றும் சமயத்தின் பேரில் உருவாகும் வன்முறைக்கு எதிராக ஒற்றுமையாகக் குரல் கொடுக்கவும் வெறுப்பையும் ஒற்றுமையின்மை யையும் தூண்டும் சித்தாந்தங்களை மறுக்கவும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் உறுப்பினர்கள் ஒன் றாகத் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கிரேஸ் ஃபூ குறிப்பிட்டார்.

இந்து ஆலோசனை மன்றத்தின் தலைவர் திரு ராஜன் கிருஷ்ணன் (இடது), இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் திரு ஆர். ஜெயசந்திரன் (வலது). இருவரும் கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூவுக்கு அன்பளிப்பு வழங்குகின்றனர். படம்: இந்து அறக்கட்டளை வாரியம்