நான்காவது மாடி சன்னலுக்கு வெளியே அமர்ந்திருந்த ஆடவரைக் காப்பாற்றிய அதிகாரிகள்

நான்காவது மாடி சன்னலுக்கு வெளியே அமர்ந்திருந்த ஆடவரைக் காப்பாற்றிய அதிகாரிகள்

1 mins read
8af4829b-bfaa-4918-aead-d332d3178499
-

காதலியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு குடிபோதையில் சீமெய் சாலையில் உள்ள புளோக் 161ல் உள்ள ஒரு நான்காவது மாடி வீட்டின் சன்னலுக்கு வெளியே உள்ள சுவரின் விளம்பில் ஏறி அமர்ந்துகொண்ட 29 வயது ஆடவரை ஐந்து மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்டனர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகள். அந்த ஆடவர் சன்னலுக்கு வெளியே உள்ள சுவரின் விளிம் பில் அமர்ந்துகொண்டிருப்பதைக் கண்ட ஒருவர் போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலிசாருக்குத் தகவல் தெரி வித்தவர் அந்த ஆடவர் அமர்ந் திருந்த சுவரின் விளிம்பின் எதிர்ப்புறத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கில் வசிப்பவர். அங்கிருந்து அந்த ஆடவர் சுவரின் விளிம்பில் உட்கார்ந்திருப்பதை தாம் பார்த்த தாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். அந்த ஆடவர் அமர்ந்திருந்த சுவர் விளிம்பு 20 செண்டி மீட்டர் அகலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவரைப் பத்திரமாக மீட்கும் அதிகாரிகள். படம்: ‌ஷின்மின்