அப்பர் சிராங்கூன் ரோட்டில் செயல்படும் கஞ்சிக்கடை ஒன்றில் விலையைப் பார்த்து கோபம் அடைந்துவிட்ட நான்கு வாடிக்கை யாளர்கள் தாங்கள் உட்கார்ந்து சாப்பிட்ட மேசையைக் குப்புற கவிழ்த்துவிட்டார்கள். மர நாற் காலிகளைத் தூக்கிவீசியடித்து அந்த இடத்தை நாசப்படுத்திவிட் டார்கள் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று அதி காலை நேரத்தில் நிகழ்ந்ததாக ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. அந்த நால்வரில் மூவர் ஆடவர்கள் என்றும் ஒருவர் மாது என்றும் அந்த நால்வரும் குடித்திருந்ததாக நம்பப்படுவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று தெரிவித்தது. அப்பர் சிராங்கூன் ரோட்டில் இருக்கும் ஹெங் லோங் டியோ சியோவ் போரிட்ஜ் என்ற கஞ்சிக் கடையில் கஞ்சி சாப்பிட்டப் பிறகு $28 கட்டணத்தைப் பார்த்ததும் அந்த நால்வரும் அதிருப்தி அடைந்தார்கள் என்று ஷின் மின் நாளிதழ் கூறியது. அந்த நால்வரும் கஞ்சி வேண்டும் என்றும் இதர பலவகை துணை உணவுகளைக் கொடுக் கும்படியும் கேட்டு இருந்தார்கள்.
கஞ்சிக்கடையில் $28 விலை தொடர்பில் கடை ஊழியர்களிடம் காரசாரமாக பேசிய நான்கு வாடிக்கையாளர்கள், பிறகு கடையை நாசப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. படம்: ஷின் மின்

