நம் எதிர்காலம் நம் கையில் - மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி

நம் எதிர்காலம் நம் கையில் - மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி

1 mins read

ரவீணா சிவகுருநாதன்

நமது எதிர்காலத்தை நாமே உரு- வாக்க வேண்டும். அதற்காகக் காத்துக்கொண்டிருக்கக்கூடாது என்று தொடர்பு, தகவல் மற்றும் கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார். மேலும் அவர், அடுத்த தலை- முறையினர், பரந்த மனத்துடன் பல்வேறு கருத்துகளை, உள்நாட்டி- லிருந்தும் உலக நாடுகளிலிருந்தும் வரவேற்க வேண்டும் என்றும் ஒரே சமுதாயமாக ஒன்றுபட்ட குறிக்- கோளையும் கனவையும் நமது நாட்டிற்காக நாம் காண வேண்டும் என்றும் கூறினார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்- கழகத்தில் நேற்று பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான கருத்தரங்கில் பேசிய அமைச்சர், சிங்கப்பூரின் வருங்கால மாற்றங்- களுக்கும் வளர்ச்சிக்கும் இளம் சந்ததியினர் எவ்வாறான முயற்சி- களில் பங்களிக்கலாம் என்று எடுத்துக்கூறினார்.

கனவு காண வேண்டும் கனவு காண்பதை நிறுத்தி விடக் கூடது என்று மாணவர் களிடம் கூறிய டாக்டர் ஜனில், ஒரு மனிதனுக்குத் தனிப்பட்ட கனவுகள் இருந்தாலும் ஒரு நாடாக நமக்கு ஒருங்கிணைந்த கனவுகள் தேவை என்றும் அது நமது சமூகத்தின் அனைத்து உறுப் பினர்களுக்குப் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்றும் விவரித்தார். மாணவர்களின் பல்வேறு சுவா- ரசியமானக் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ஒரு குறிப்பிட்ட இனப் பிரிவினருக்காக ஒதுக்கப்படும் அதிபர் தேர்தல் முறை பற்றி மாணவர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். சிங்கப்பூரின் போக்குவரத்து வச திகள், இணையப் பாதுகாப்பு போன்ற பலவகைக் கேள்விகளையும் மாணவர்கள் எழுப்பினர்.