பேருந்து-, டாக்சி சம்பந்தப்பட்ட விபத்தில் எட்டுப் பேர் காயம்

பேருந்து-, டாக்சி சம்பந்தப்பட்ட விபத்தில் எட்டுப் பேர் காயம்

1 mins read

எஸ்பிஎஸ் பேருந்து ஒன்றுக்கும் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி ஒன்றுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நிகழ்ந்த விபத்தில் எட்டு பேர் காயம் அடைந்தனர். ஹவ்காங் அவென்யூ 2, இயோ சூ காங் ரோடு சாலைச் சந்திப்பில் காலை 11.35 மணிக்கு நிகழ்ந்த விபத்து குறித்து போலிசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. காயம் அடைந்த எட்டு பேரும் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலிஸ் விசாரணை நடைபெறுகிறது.