பெண்களை வைத்து விபசாரத் தொழில் நடத்திய ஆடவரைக் கொலை செய்த குற்றத்துக்காக விபசார விடுதி ஒன்றை நடத்தி வந்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் உலோகப் பளுதூக்கியைப் பயன்படுத்தி 35 வயது வில்லியம் தியா ஹுங் வாயை பென்னி சியாவ் என்று அழைக்கப்படும் 53 வயது சான் லாய் சியான் தாக்கினார். இந்தக் கொலைச் சம்பவம் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதியன்று காலை 11 மணிக்கும் பிற்பகல் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் லோரோங் 18 கேலாங்கில் உள்ள விடுதியில் நிகழ்ந்தது. அந்த விடுதி விபசாரத்துக்காகப் பயன்படுத்தப் பட்டது.
திரு தியா தம்மிடமிருந்து 6,500 வெள்ளி திருடியதாக குற்றம் சுமத்தி உலோகப் பளு தூக்கியைக் கொண்டு அவரது தலையில் பென்னி சியாவ் ஒன்பது தடவை அடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. சுயநினைவு இழந்து கோமா நிலைக்குச் சென்ற திரு தியா தலையில் ஏற்பட்ட படு காயத்தின் காரணமாக டான் டோக் செங் மருத்துவமனையில் ஒரு வாரம் கழித்து மரணம் அடைந்தார். தமது இறுதி மூச்சுவரை பென்னி சியா தம்மீது சுமத்திய குற்றச்சாட்டை திரு தியா மறுத்ததாகக் கூறப்படுகிறது. திரு தியாவும் பென்னி சியாவும் ஒரே குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணை யில் தெரிய வந்துள்ளது. தாக்குதல் நிகழ்ந்த இடத் துக்கு ஆம்புலன்சும் போலிசாரும் வந்தடைந்தபோது திரு தியா காயமடைந்த நிலையில் நடைபாதையில் கிடந்ததாகவும் அக் கறை கொண்டு அவரை விடுதிக்குக் கொண்டு வந்ததாகவும் பென்னி சியாவ் பொய் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

