வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கனரக வாகனத்திலிருந்து அகன்ற டயர் இரு கார்கள் மீது மோதியதில் கார் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்று காலை நிகழ்ந்தது. இலேசான காயங்களுடன் அந்த ஓட்டுநர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கனரக வாகனத்திலிருந்து அகன்ற டயர் அந்த 27 வயது ஆடவரின் கார் மீது மோதியதும் அவரது காரின் காற்றுப்பை வெளியானது. வெளியான காற்றுப்பையின் காரணமாக அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கனரக வாகனத்திலிருந்து அகன்ற டயர்; ஆடவருக்கு இலேசான காயங்கள்
1 mins read

