சிராங்கூன் சாலையில் விபத்து: போக்குவரத்து போலிஸ் அதிகாரி மரணம்

சிராங்கூன் சாலையில் விபத்து: போக்குவரத்து போலிஸ் அதிகாரி மரணம்

1 mins read
c6a9bb7f-9861-4ef9-979b-b6f92ee728c5
-

சிராங்கூன் சாலையில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தின் காரணமாகப் போக்குவரத்து போலிஸ் அதிகாரி ஒருவர் மரணம் அடைந்தார். 29 வயது ஸ்டாஃப் சார்ஜண்ட் நட்ஸ்ரி மடின் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்ததாக போலிசார் தெரிவித்தனர். ஸ்டாஃப் சார்ஜண்ட் நட்ஸ்ரி 2009ஆம் ஆண்டில் சிங்கப்பூர் போலிஸ் படையில் இணைந்தார். பயிற்சிக்காலம் முடிந்த பிறகு அவர் போக்குவரத்து போலிஸ் பிரிவில் சேர்ந்தார். அவரது குடும்பத்தினரிடம் போலிஸ் ஆணையர் ஹூங் வீ டெக் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரி வித்துக்கொண்டார். மரணம் அடைந்த அதிகாரி யைக் காட்டும் படங்களையோ காணொளிகளையோ பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலிசார் கேட்டுக்கொண் டுள்ளனர்.

சிராங்கூன் சாலையில் நிகழ்ந்த விபத்தில் போக்குவரத்து போலிஸ் அதிகாரி மரணம் அடைந்தார். அவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் நொறுங்கிய நிலையில் புல்தரையில் கிடந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்