சண்முகம்: மாண்ட போலிஸ் அதிகாரி சிங்கப்பூரின் உண்மையான மகன்

சண்முகம்: மாண்ட போலிஸ் அதிகாரி சிங்கப்பூரின் உண்மையான மகன்

1 mins read
f42504b8-ab1f-47bb-80de-3143f7720621
-

மறைந்த போக்குவரத்து போலிஸ் அதிகாரி ஸ்டாஃப் சார்ஜண்ட் நட் ஸிரி மாட்டின் சிங்கப்பூரின் உண் மையான மகன் என்று சட்ட, உள் துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார். "அவரைப் போன்ற அதிகாரி கள் நாள்தோறும் தங்கள் கடமை யைச் செவ்வனே ஆற்றிக் கொண்டு வருகிறார்கள். அவர் கள் பாராட்டப்படாத வீரர்கள்," என்று செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், நேற்று திரு நட்ஸிரியின் இல்லத்துக்குச் சென்று அவரது மனைவி, குடும் பத்தாருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். அமைச்சருடன் உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸாக்கி முகம்மது ஆகியோரும் சென்றிருந்தனர்.

பின்னர் தனது ஃபேஸ்புக் பக் கத்தில் அமைச்சர் சண்முகம், "நட்ஸிரி ஒரு திறமையான உள் துறை அமைச்சுக் குழு அதிகாரி. அவருக்கு 2015ல் நற்சேவை பதக் கம் வழங்கப்பட்டது. "கடந்த ஆண்டு இதே ஜூன் 1ஆம் தேதி அவர் ஸ்டாஃப் சார் ஜண்ட் நிலைக்குப் பதவி உயர்வு பெற்றார். தனது தேசிய சேவைக் குப் பிறகு முழு நேரமாக சிங்கப் பூர் போலிஸ் படையில் சேர்ந்த அவர் பல்வேறு அக்கம்பக்க போலிஸ் மையங்களுக்கு அனுப் பப்பட்டு, இறுதியாக போக்கு வரத்து போலிஸ் பிரிவில் சேர்க்கப் பட்டார்.

போலிஸ் அதிகாரிகள் நட்ஸிரியின் நல்லுடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியின் மீது தேசிய கொடியைப் போர்த்துகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்