ஃபேஸ்புக் பதிவுகளுக்கு அமைச்சர் சண்முகத்தின் பாராட்டும் கண்டனமும்

2 mins read

விபத்தில் சிக்கி மரணமுற்ற போக் குவரத்து போலிஸ் அதிகாரி நட் ஸிரி மாட்டின் போன்ற இதர போலிஸ் அதிகாரிகளின் கடமை யுணர்ச்சியைச் சுட்டிக்காட்டி இணைய பயனாளர் ஒருவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரி வித்துள்ளார். திரு கார்த்திக் விநோத் எனும் ஃபேஸ்புக் பயனாளர் அதிகாரி நட்ஸிரியின் மறைவு, சக போலிஸ் அதிகாரிகளை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பதை விளக்கி நேற்று முன்தினம் உளமுருகும் பதிவு ஒன்றைப் பகிர்ந்துகொண் டார். உள்துறை அமைச்சு குழுவின் அதிகாரிகள் நீண்ட நேரம் வேலை செய்து, மிகுந்த விழிப்புடன் இருந்து, சிங்கப்பூர் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைப் பண யம் வைத்து உழைக்கும் போக்கு குறித்தும் வினோத் எழுதியிருந்தார்.

கடமையில் இருக்கும்போது காயமுறும் அல்லது மரணமடை யும் போலிஸ் அதிகாரிகள் பற்றி கேலி செய்பவர்களையும் ஒட்டு மொத்த போலிஸ் படையைக் கிண்டல் அடிப்பவர்களையும் வினோத் சாடியிருந்தார். தான் ஒரு முன்னாள் போலிஸ் அதிகாரி என்றும் ஒரு போலிஸ் அதிகாரியின் பணி குறித்தும் கடமையுணர்வு குறித்தும் மற் றொரு போலிஸ் அதிகாரிக்குத் தான் தெரியும் என்று குறிப்பிட்டி ருந்த வினோத், நட்ஸிரியின் மறைவு சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கலாம். ஆனால் மிக வேகமாக வரும் வாகனங்களை நிறுத்தி அவற்றால் உங்கள் குடும் பத்தாருக்குக் காயம் ஏற்படாமல் இருக்க உதவியுள்ளார் என்று உங்களில் எத்தனை பேர் சிந் தித்திருப்பீர்கள் என்று வினா எழுப்பினார்.

"நீங்கள் பொதுவாக எட்டு மணி நேரம் வேலை செய்து கொண்டு வேலை வாழ்க்கை சம நிலை பற்றி பேசுறீர்கள். ஆனால் ஒரு போலிஸ் அதிகாரி நாள் ஒன்றுக்குச் சராசரியாக 14 மணி நேரம் வேலை செய்கிறார் என் பதை அறிவீர்களா? "நீங்கள் பார்த்ததை வைத்து, போலிஸ் படையைக் குறை கூறு கிறீர்கள். ஆனால், பலருக்குத் தெரியாத பல தியாகங்களைப் புரிந்து போலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமையை ஆற்றுகி றார்கள் என்பது பலரும் அறியாத உண்மை," என்றார் அவர். சிங்கப்பூர் போலிஸ் படை உல கின் தலைசிறந்தவற்றுள் ஒன்று என்று கூறிய வினோத், தங்கள் தரத்துக்கு அவர்கள் பொருத்த மற்றவர்கள் என்று நினைப்போ ருக்கு சவால் ஒன்றை விடுத்தார்.