சிங்கப்பூர் வாகனமோட்டிகளின் அபராதத் தொகை $13.6 மி

1 mins read
1d77e299-85b7-4f1c-ba81-1b97838d0d67
-

ஜோகூர் பாருவில் போக்குவரத்து தொடர்பான குற்றங்கள் புரிந்து இன்னும் அபராதம் செலுத்தாத சிங்கப்பூர் வாகனமோட்டிகள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை அதிகம் என்று ஜோகூர் போக்குவரத்து மற்றும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை இன்னும் செலுத்தப்படாத 5.6 மில்லியன் ரிங்கிட் (S$1.8 மில்லி யன்) தொகை சிங்கப்பூர் வாகன மோட்டிகளிடம் இருந்து வசூலிக் கப்பட்டுள்ளது என்று ஜோகூர் போக்குவரத்து போலிஸ் கூறியது.

"கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிங்கப்பூர் வாகனமோட்டிகளிடமி ருந்து பெறப்பட்ட அபராதத் தொகை 41,998 அழைப்பாணை கள் மூலம் வந்தது. "இதுவரை 140,321 செலுத்தப் படாத அழைப்பாணைகள் மூலம் அபராதத் தொகை சிங்கப்பூர் வாகனமோட்டிகளிடமிருந்து வர வேண்டியுள்ளது. "நாங்கள் எங்கள் அமலாக்க நடவடிக்கையை மேலும் துரிதப் படுத்தி அந்தத் தொகையைப் பெற ஆவன செய்வோம்," என்று ஜோகூர் போக்குவரத்து மற்றும் அமலாக்கப் பிரிவின் தலைவர் ஸுல்கைரி முக்தார் தெரிவித்ததாக மலேசியாவின் 'தி ஸ்டார்' நாளிதழ் செய்தி வெளியிட்டது.

ஜோகூர் சாலைகளில் சிங்கப்பூர் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. படம்: ஏ‌ஷியா ஒன்