நாடுகள் ஒன்றுசேர்ந்து பாடுபட்டு உலகமய வாய்ப்புகளைப் பெற சிங்கப்பூர் வலியுறுத்து

நாடுகள் ஒன்றுசேர்ந்து பாடுபட்டு உலகமய வாய்ப்புகளைப் பெற சிங்கப்பூர் வலியுறுத்து

1 mins read
39cadf58-aed9-4404-8626-490b8ba4248c
-

உலகமயம் என்பது இரண்டு பக் கமும் கூர்மையான கத்தி போன் றது என்று இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங் குறிப் பிட்டார். உலகமயத்தால் ஏராள வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அந்த ஏற்பாடு காரண மாக பல நாடுகளில் பதற்றம் நிலவுகிறது என்று அவர் தெரி வித்தார். உலகமயத்தின் பல நன்மை களை அடையும் வகையில் அதிக வாய்ப்புகளுடன் தென்கிழக்கு ஆசியா திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். எல்லா நாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட வேண்டியது இதற்கு அவசியமான ஒன்று என்றார் அவர். ஆண்டுதோறும் நடக்கும் ஷங்கிரிலா கலந்துரையாடலை ஒட்டி நடந்த ஒரு விருந்தில் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த இளம் தலைமுறைத் தலைவர்களிடையே உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். ஆசியான் நாடுகள் தாராள வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் என்று குறிப் பிட்ட அவர், அந்த நாடுகள் எப் போதுமே முக்கியமான வர்த்தக வழித்தடங்களின் ஒரு பகுதியாக இருந்து வந்திருப்பதாகத் தெரி வித்தார்.

இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்