அதிபர் தேர்தலில் போட்டியிட தொழிலதிபர் சாலே மரிக்கான் விருப்பம்

அதிபர் தேர்தலில் போட்டியிட தொழிலதிபர் சாலே மரிக்கான் விருப்பம்

2 mins read
f38cd419-1748-4160-9a9d-2f02ad53f2b8
-

சுதாஸகி ராமன்

அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள திரு முகமது சாலே மரிக்கான், தேர்தல் விண்ணப்பப் படிவங்களை நேற்றுக் காலை தேர்தல் துறைக்குச் சென்று பெற்றுக் கொண்டார். வரும் அதிபர் தேர்தல் மலாய் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட் டுள்ளது. அந்த வரிசையில் இது வரை திரு முகமது சாலே உட்பட இருவர் அதிபர் தேர்தலுக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொண்டனர். ஆடைகளை விற்கும் 'செக் கண்ட் சான்ஸ் புரோபர்டிஸ்' நிறுவ னத்தின் தலைமை நிர்வாக அதி காரியாக திரு சாலே உள்ளார். மலாய் சமூகத்தைச் சேர்ந்தவ ரால் நிர்வகிக்கப்பட்டு சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள முதல் நிறுவனம் என்ற பெரு மையை இந்நிறுவனம் பெற்றிருக் கிறது. "தற்போது வியாபாரத்தில் நன் றாகச் செய்து வருகிறேன்.

ஆகவே, சமூகத்திற்கு அதிக அளவில் திருப்பிக் கொடுக்க அதிபராக விரும்புகிறேன்," என்று திரு சாலே கூறினார். விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் செய்தி யாளர்களுடன் பேசிய திரு சாலே, தொழிலதிபராகத் தமக்கு சிறந்த தீர்ப்புகளை எடுக்கும் பண்பும் நல்லதோர் உணர்வு சார்ந்த நுண் ணறிவும் உள்ளதாகக் கூறினார். இதனால் மற்ற வேட்பாளர்களிடமிருந்து தாம் வேறுபட்டவர் என் றும் அவர் கூறினார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதி வரம்புகள் அண்மையில் மாற்றப்பட் டுள்ளன. அதன்படி தனியார் துறையில் அனுபவம் உள்ள வேட் பாளர்கள், $500 மில்லியன் அள விற்கு முத லீடு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தை நிர்வகித்திருக்க வேண்டும். ஆனால், திரு சாலேயால் நிர் வகிக்கப்படும் 'செக்கண்ட் சான்ஸ் புரோபர்டிஸ்' நிறுவனம், கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் $254.3 மில்லியனிலிருந்து $263.25 மில் லியன் வரை முதலீடுகளைப் பெற்றுள்ளது.