லண்டனுக்கு தொடர்ந்து பயணங்களை மேற்கொள்ளும் சிங்கப்பூரர்கள்

லண்டனுக்கு தொடர்ந்து பயணங்களை மேற்கொள்ளும் சிங்கப்பூரர்கள்

1 mins read

லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகளைச் செய்துள்ள சிங்கப்பூரர்கள், கடந்த சனிக்கிழமை அங்கு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ள வேளையில், தங்கள் பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். பயண நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு இதுபற்றி தான் விசாரித்தபோது, தங்கள் பயணிகளிடமிருந்து எவ்வித பயண ரத்துகளோ, பயண மாற்றங்களோ கிடைக்கப் பெற வில்லை என்று அவை தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கூறியது.

இருப்பினும் லண்டனில் நிகழும் சம்பவங்களை தாங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தங்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தேவை ஏற்பட்டால் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களைக் கொண்டு வரத் தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்தன. தற்சமயம் தனது நிறுவனத்தின் 30 பயணிகள் லண்டனில் உள்ளனர் என்று கூறிய டைனஸ்டி டிராவல், சனிக்கிழழை தாக்குதலுக்குப் பிறகு லண்டன் பாலம் மூடப் பட்டதால், அங்கு செல்வதற்குப் பதிலாக தனது பயணி களை பிரிட்டிஷ் அரும்பொருளகத்துக்கு அழைத்துச் சென்ற தாக சொன்னார் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் தொடர்பு பிரிவு இயக்குநர் அலிசியா சியா.