அதிகமானோரை தொண்டூழியத் தில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கத்தில், நிறுவனத் தொண்டூழியர்களை தன்னார்வ சமூகநல அமைப்புகளுடனும் சமூக நிறுவனங்களுடனும் இணைக்கும் புதிய திட்டத்தை தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் நேற்றுத் தொடங் கியுள்ளது. லவ் ஏ ஹோம்@ சவுத் வெஸ்ட் என்ற இந்தத் திட்டம் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு இலக்குகளுக்கு ஏற்ப அவற்றின் ஊழியர்களை சமூகநல அமைப்புகளுடனும் சமூக நிறுவனங்களுடனும் இணைக்கும். நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தொண்டூழியத்தை உறுதி செய்யும் வகையில் குறைந்தது ஓராண்டு காலத்துக்கான நீண்ட காலக் கடப்பாடு இருதரப்பினரிடையேயும் ஏற்படுத்தப்படுகிறது.
புதிய முயற்சியின்கீழ் தாதிமை இல்லங்கள், சிறார் இல்லங்கள் போன்ற தென் மேற்கு வட்டாரத்திலுள்ள 100 அமைப்புகள் நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எந்த நிறுவனமும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். சமூகத்தில் சமூக ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்தில் தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது என்று திட்டத்தை நேற்றுத் தொடங்கி வைத்துப் பேசிய தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங் தெரிவித்தார்.

