ரத்த தானம் செய்பவர்களுக்கு உயரிய விருது

2 mins read
5eeb70e0-549a-42dd-b52d-08c76f52144e
-

சுதாஸகி ராமன்

'ஸ்பைரோஸ்' கப்பல் கடந்த 1978ஆம் ஆண்டு வெடித்த சம்பவத்தின்போது காயமுற்றவர் களுக்கு ரத்தம் அவசரமாக தேவைப்பட்டது. அப்போது தேசிய சேவை புரிந்துகொண்டிருந்த திரு ஜோசஃப் ரவிந்திரன் கிரிஸ்ட்டி, ரத்த தானம் செய்வதற்காக உடன டியாக முன்வந்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன் தமது ரத்தத்தை முதன் முறையாகத் தானம் செய்த அவர், இதுவரை 200க்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்து பலரது உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். அவருடைய பங்களிப்புக் காக 'மெடல் ஆஃப் லைஃப்' என்ற விருதை நேற்று அவர் பெற்றுக்கொண்டார். தமது ரத்தத்தை முதல் முறை தானம் செய்ததிலிருந்து ஒவ் வொரு முறையும் தாம் தானம் செய்யும்போது 58 வயது திரு ஜோசஃபுக்கு மனநிறைவு கிடைக்கி றது.

இந்த 30 நிமிட ரத்த தான நடவடிக்கையினால் பல உயிர் களைக் காப்பாற்ற முடிகிறது என்று 'ஏபி+' ரத்த வகை உடைய அவர் கூறினார். "ரத்தத்தை முழுமையாக தானம் செய்வதால் 12 வாரங் களுக்கு ஒருமுறைதான் தானம் செய்ய முடியும். 'எஃபெரெசிஸ்' தான முறையில் ரத்தத்தின் எந்தப் பாகம் மிகவும் தேவைப்படுகிறதோ, அந்தப் பாகத்தை மட்டுமே இயந்திரம் மூலம் ரத்தத்திலிருந்து பிரித்துத் தானமாகக் கொடுக் கலாம். அவ்வாறு நான்கு வாரங்க ளுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்," என்றார் திரு ஜோசஃப். இந்த 'எஃபெரெசிஸ்' ரத்த தான முறையைக் கடந்த 15 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் அவர், இப்போது ஆண்டுக்கு ஆறு முறையாவது தமது ரத்தத்தைத் தானம் செய்து வருகிறார்.