தங்களுடைய 25 ஊழியர்களுக்கு வேலையிட காயத்திற்கான இழப் பீட்டுப் பாதுகாப்புக் காப்புறுதியை வாங்கத் தவறிவிட்டதாக இரண்டு முதலாளிகள் மீது குற்றம் சுமத் தப்பட்டு இருக்கிறது. எக்ஸ்ட்ரோவர்ட் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் மீதும் ரிட்ஜ்வே மரைன் & கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தின் உரிமை யாளரான சூரியகுமார் ரிட்ஜ்வே ராமையா என்பவர் மீதும் ஜூன் 8ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது. வேலைபார்த்தபோது காயம் அடைந்த ஊழியர் ஒருவருக்கு இழப்பீடு கொடுக்கவில்லை என்று கூறும் ஒரு குற்றச்சாட்டையும் சூரியகுமார் ரிட்ஜ்வே எதிர்நோக்கு கிறார். எக்ஸ்ட்ரோவர்ட் நிறுவனத் தில் வேலை செய்த பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் சென்ற ஆண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஓர் ஏணி யிலிருந்து விழுந்துவிட்டார்.
இதில் அவருடைய இடது தோல்பட்டை முட்டி கழன்று விட்டது. ஆனால் அவருக்கும் இதர 13 ஊழியர்களுக்கும் காப் புறுதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில் அந்த நிறுவனம் ஏற்பாடு எதையும் செய்யவில்லை. அந்நிறுவனத்தில் வேலை செய்த 22 ஊழியர்களில் எட்டு பேருக்கு மட்டுமே இந்தப் பாது காப்பு இருக்கிறது. காயம் அடைந்தவருக்குப் பின்னர் இந்த நிறுவனம் $5,973.14 இழப்பீடு கொடுத்தது. சூரியகுமார் ரிட்ஜ்வே நிறு வனத்தின் பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் 2015ல் வேலை பார்த்த போது ஓர் ஏணியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். முதுகிலும் இடது முழங்கையிலும் அவர் காயம் அடைந்துவிட்டார். இந்த ஊழியருக்கும் இதர 10 பேருக்கும் சூரியகுமார் ரிட்ஜ்வே பாதுகாப்புக் காப்புறுதி எதையும் வாங்கியிருக்கவில்லை. காயம் அடைந்த ஊழியருக்கு கொடுக்க வேண்டிய $9,144.97 தொகையை அவர் கொடுக்கவும் இல்லை. இந்த விவரங்களை மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.

