தீவிரவாத மனப்போக்கைக் கொண்ட சிங்கப்பூரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது, சிங்கப் பூர் கடுமையான பயங்கரவாத மிரட்டலை எதிர்நோக்குகிறது என் பதை நினைவூட்டுவதாக முஸ்லிம் விவகார பொறுப்பு அமைச்சர் டாக் டர் யாக்கூப் இப்ராஹிம் தெரி வித்தார். இந்த மிரட்டலைச் சமாளிக்க சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகமும் பாதுகாப்பு அமைப்புகளும் சேர்ந்து கடுமையாகப் பாடுபட்டுவருவதாக அவர் கூறினார். தீவிரவாத மனப்போக்கைக் கொண்டிருந்ததற்காக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் முதன்முதலாக ஒரு பெண் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்தத் தகவல் பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த போது அமைச்சர் யாக்கூப் இவ்வாறு கூறினார். இதுபோன்று ஒவ்வொரு சம்பவமும் தலையெடுக்கும்போது சிங்கப்பூரர்களுக்கு முஸ்லிம்கள் மேல் சந்தேகம் எழும் என்பது பற்றி நாம் மிகவும் ஏமாற்றமும் கவலையும் அடைகிறோம் என்று டாக்டர் யாக்கூப் தெரிவித்தார். "சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகம், முயிஸ் மற்றும் இதர சமூக அமைப்புகளின் தலைமை யில் பாதுகாப்பு அமைப்புகளுடன் சேர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதி ராக நம் சமூகத்தைப் பாதுகாக்க கடுமையாகப் பாடுபட்டுவரு கிறது," என்றார் அமைச்சர்.
முஸ்லிம் விவகார பொறுப்பு அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம். கோப்புப்படம்

