சைக்கிள் சக்கரத்தில் கால் சிக்கியதால் துடித்த சிறுவன்

சைக்கிள் சக்கரத்தில் கால் சிக்கியதால் துடித்த சிறுவன்

1 mins read
06ad242c-3070-4a3f-adbe-dc53e192cea2
-

சைக்கிள் சக்கரத்தில் சிறுவனின் கால் சிக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து தங்களுடைய சைக்கிள்கள் பாதுகாப்பானவை என்று சைக்கிள் நிறுவனமான 'ஓஃபோ' உறுதி கூறியுள்ளது. பின்சக்கரத்தில் கால் சிக்கியிருந்த நிலையில் வலியால் துடித்த சிறுவனின் காணொளி படம் பேஸ்புக்கில் பதி வேற்றப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஊடகப் பதிவாளர்கள் பலர் சைக்கிள் பாதுகாப்பற்றது என்று குறைகூறினர். இது குறித்து ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்த 'ஓஃபோ' நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், பதினெட்டு வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு மட்டுமே சைக்கிள் வழங்குவதை உறுதி செய்கிறோம் என்றார். சம்பவம் பற்றி கேள்வியுற்றதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதற்குள் வழிப்போக்கர் ஒருவர் உதவியால் சிறுவன் தனது காலை எடுத்துவிட்டதாகவும் அவனுக்கு சிறிய சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் பேச்சாளர் கூறினார்.