சுயதீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டவர்களை அடையாளம் காண் பதற்கான வழிகாட்டிக் குறிப்பு களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் பாதுகாப்பு நிறுவனங்களின் சங்கம் (எஸ்ஏஎஸ்) வழங்க வுள்ளது. இந்த அறிவிப்பை சங்கம் நேற்று வெளியிட்டது. ஏட்டோஸ் துணை போலிஸ் அதிகாரி ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பது, மற்றொருவருக்கு கட்டுப்பாடு ஆணை விதிக்கப்பட்டிருப்பது ஆகியவை குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைவதாக எஸ்ஏஎஸ் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், சிங்கப்பூரர்களான இரண்டு துணை போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட் டிருப்பதாக உள்துறை அமைச்சு சென்ற செவ்வாய்க்கிழமை அறி வித்தது. சீருடைப் பணியாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. அந்த இரண்டு ஏடோஸ் பாது காப்பு நிறுவன அதிகாரிகளும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது சென்ற மாதம் கைது செய்யப் பட்டனர். தனியார் பாதுகாப்பு நிறுவனங் களின் மீதும் அங்கு பணிபுரிவோர் மீதும் பொதுமக்களிடையேயான நம்பிக்கையை இந்தச் சம்பவம் குறைக்கக்கூடும் என்று எஸ்ஏஎஸ் சொன்னது.

