பிடோக் ரெசர்வாரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட வயதான தம்பதியரின் வீட்டுப் பணிப்பெண் கொலை நடந்த அதே நாளில் அதாவது, நேற்று முன்தினமே சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியத் தீவுக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 79 வயது ஆடவர், 78 வயதான அவரது மனைவி ஆகிய இருவரின் கொலையில் அந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்குத் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வயதான தம்பதி இருவரும் அவர்களது வீட்டில் அசைவின்றிக் கிடந்தனர். அவர்கள் இறந்துவிட்டதாக பின்னர் உறுதிசெய்யப்பட்டது. இந்தோனீசியாவைச் சேர்ந்த அவர்களது பணிப்பெண் அவர்களுடன் சுமார் ஒரு மாத காலம் வசித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் ஹார்பர் ஃபிரண்ட் நிலையத்துக்குச் சென்ற அந்த பணிப்பெண் அங்கிருந்து உடனடியாக புறப்படக்கூடிய படகில் செல்வதற் கான நுழைவுச் சீட்டை வாங்கி இந்தோனீசியாவுக்குச் சென்று விட்டதாக ஷின் மின் நாளிதழ் நேற்று தெரிவித்தது.
78 வயதான மனைவி சின் செக் ஃபாவுடன் 79 வயது சியா நிம் ஃபோங். படம்: ஷின் மின் நாளிதழ்

