கோ: தானியக்க வாகனச் சோதனைகள் ஒன்-நார்த்தை தாண்டி செயல்படும்

கோ: தானியக்க வாகனச் சோதனைகள் ஒன்-நார்த்தை தாண்டி செயல்படும்

1 mins read

தானியக்க வாகனச் சோதனைகள் இனி ஒன்- நார்த்தை தாண்டி, அக்கம் பக்க பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம். சிங்கப்பூர் அறிவியல் பூங்கா 1, 2, டோவர், போன விஸ்டா ஆகிய பகுதிகளிலும் இனி வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்படும். இது பற்றி ஃபேஸ்புக் தளத்தில் கருத்துரைத்த திரு கோ, "2015ஆம் ஆண்டு ஜூலை முதல் ஒன்-நார்த்தில்தான் இந்த வாகனச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதற்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இப்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக அருகில் உள்ள பகுதிகளிலும் இந்தச் சோத னைகளை நடத்திப் பார்க்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள் ளது. எதிர்காலத்தில் குடியிருப்புப் பேட்டைகளிலும் சோதனை கள் நடத்தப்படலாம். இதன் மூலம் கூடுதல் பகுதிகளில் உள்ள போக்குவரத்து நிலைமைக்கேற்ப தானியக்க வாகன முறையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரலாம்," என்று சிந்திக்கலாம்," என்று தெரிவித்தார்.