ஜூரோங் வெஸ்ட் வீவக வீட்டில் பாலியல் சேவை: மூன்று பெண்கள் கைது

ஜூரோங் வெஸ்ட் வீவக வீட்டில் பாலியல் சேவை: மூன்று பெண்கள் கைது

1 mins read

பாலியல் சேவைகள் வழங்கிய மூன்று வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் தெரிவித்துள்ளது. அவர்கள் மூவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள். ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 65ல் உள்ள 14வது மாடி வீடு ஒன்றில் ஜூரோங் வட்டார போலிஸ் பிரிவின் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் அந்தப் பெண்கள் சிக்கினர்.

சமூக வருகை அனுமதிச் சீட்டு வைத்திருந்த அந்த மூவரும் பாலியல் சேவைகள் வழங்கினர் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வீட்டுக்கு வெளியே முன் பின் தெரியாதவர்களை பல முறை தாங்கள் பார்த்திருப்பதாகக் கூறிய குடியிருப்பா ளர்கள் அந்தப் பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.