'எம்ஐடி'-சிங்கப்பூர் வடிவமைப்புப் பல்கலைக்கழக உடன்பாடு நிறைவு

'எம்ஐடி'-சிங்கப்பூர் வடிவமைப்புப் பல்கலைக்கழக உடன்பாடு நிறைவு

1 mins read
262d4b46-8a75-4239-8357-aa2cd898ca38
-

எம்ஐடி எனப்படும் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பயி லகம் ஏழு ஆண்டு பங்காளித்துவ உடன்பாட்டின் கீழ் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல் கலைக்கழகத்திற்கு உதவி வந்து உள்ளது. அந்த உதவியின் காரணமாக சிங்கப்பூர் வடிவமைப்புப் பல்கலைக் கழகம் தனிச் சிறப்புடைய பாடத் திட்டங்களையும் போதனை முறை யையும் உருவாக்கி உள்ளது. இதன்காரணமாக சிங்கப்பூரின் இந்த நான்காவது பல்கலைக் கழகம் புத்தகக் கல்விகளுக்கு அப்பாலும் சென்று பிரச்சினை களுக்குத் தீர்வுகாணும் ஆற்ற லுடன் கூடிய பட்டதாரிகளைப் பேணி உருவாக்க முடிந்துள்ளது.

இப்போது இந்த வடிவமைப்புப் பல்கலைக்கழகம் இரண்டு அணி பட்டதாரிகளை உருவாக்கி உள் ளது. அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைத்துள்ளன. இந்த நிலையில் இந்தப் பல் கலைக்கழகம் அமெரிக்காவின் பயிலகத்துடன் கூடிய தன்னுடைய கல்வி உடன்பாட்டை முடித்துக் கொள்கிறது. இருந்தாலும் இரு பல்கலைக்கழகங்களுக்கு இடை யில் ஆய்வு பணிகள் தொடரும். அமெரிக்காவின் எம்ஐடி பயி லகம் உலகின் தலைசிறந்த பொறியியல் பல்கலைக்கழகம் என்று பெயர் பெற்று இருக்கிறது. உடன்பாடு முடிவுக்கு வருவதை அடுத்து சிங்கப்பூரின் வடிவமைப் புப் பல்கலைக்கழகம் எம்ஐடி என்ற பெயரை பயன்படுத்தும் சலுகை களில் சிலவற்றை இழக்கும்.

சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்