பணிப்பெண்ணை சிங்கப்பூருக்கு நாடு கடத்த இந்தோனீசியா மறுப்பு

பணிப்பெண்ணை சிங்கப்பூருக்கு நாடு கடத்த இந்தோனீசியா மறுப்பு

2 mins read
db373ee0-a9fd-4e27-944a-5d29717e9f9d
-

பிடோக் இரட்டைக் கொலை தொடர் பாக கைது செய்யப்பட்ட இந்தோ னீசியப் பணிப்பெண் சிங்கப்பூருக்கு அனுப்பப்படமாட்டார். எனினும், இந்தக் கொலை வழக்கில் சிங்கப்பூர் போலிசுடன் இந்தோனீசிய போலிஸ் இணைந்து பணியாற்றும் என்று இந்தோனீசிய போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். "இந்த வழக்கை சிங்கப்பூர் போலிஸ் படையின் உதவியுடன் இந் தோனீசிய தேசிய போலிஸ் கையா ளும். ஆனால் 'பெர்சனாலிட்டிட்' என்ற இந்தோனீசிய சட்டக் கொள்கை யின்படி பணிப்பெண் கசானா சிங்கப் பூருக்கு நாடு கடத்தப்படமாட்டார் என்று தலைமை போலிஸ் ஆய்வாளர் செட்யோ வசிஸ்டோ 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் கூறினார். வெளிநாட்டில் நிகழ்ந்த குற்றச் செயலுக்காக இந்தோனீசியாவில் கைது செய்யப்படும் அந்நாட்டவர், குற்றச்செயல் நிகழ்ந்த நாட்டுக்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக, அந்த வழக்கு விசாரணை இந்தோனீசியாவில்தான் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளூர் சட்டக் கொள்கை என்று திரு வசிஸ்டோ விளக்கினார்.

41 வயது கசானா சிங்கப்பூரில் ஒரு மாத காலம் பணிப்பெண்ணாக வேலை பார்த்தார். ஜூன் 21 அன்று பிடோக் ரெசர் வார் ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் அவரின் முதிய முதலாளிகள் கட் டப்பட்ட நிலையில் காணப் பட்டனர். பின்னர் அவர்கள் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அச் சம்பவத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வார காலமாக கசானா தலை மறைவாக இருந்தார். உள்ளூர்வாசிகள் கொடுத்த தக வலைத் தொடர்ந்து, செவ்வாய்க் கிழமை இரவு இந்தோனீசியாவின் ஜாம்பி மாநிலத்தில் அவர் தங்கிஇருந்த ஹோட்டல் அறை யில் கைது செய்யப்பட் டார்.

கைதானபோது அவரி டம் ஏராளமான நகைகள், கடிகாரங்கள், கைபேசி, மடிக்கணினி, பல நாடு களின் பணம் ஆகியவை இருந்தன. தனது முதலாளி களைக் கொலை செய்த குற்றத்தை போலிஸ் அதி காரிகளிடம் கசானா ஒப் புக்கொண்டதாகத் திரு வசிஸ்டோ கூறினார். விசாரணைக்காக ஜாம்பி மாநில போலிசார் அவரைத் தடுத்து வைத்து இருப்பதைத் திரு வசிஸ்டோ உறுதிப் படுத்தினார். கசானாவின் விதி இப்போது இந் தோனீசிய புலன் விசாரணையாளர்கள் கைகளில் உள்ளது. கசானாவுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் உள்ளனவா என்பதை அவர்கள்தான் முடிவு செய்வர். என்றபோதும், இந் தோனீசிய நீதிமன்றத்தில் அவர்மீது குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னதாக மாநில வழக்கறிஞர்களின் ஒப்புதலை அவர்கள் பெறவேண்டும்.

இந்தோனீசியாவும் சிங்கப்பூரும் இருநாடுகளுக்கிடையேயான உடன் பாட்டின் ஓர் அங்கமாக நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கையெழுத்திட்டன. ஆனால் இந்த உடன்பாடு இந்தோ னீசிய நாடாளுமன்ற ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

கொலையாளியாகச் சந்தேகிக்கப்படும் பணிப்பெண் கசானா. படம்: இணையம்