தொழிலாளர் நீதிமன்றத்தின் செயல்பாட்டில் முரண்பாடுகள் இருப்பதாகக் குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டுத் தொழிலாளர் களுக்கு உதவும் அரசாங்க சார்பற்ற உள்ளூர் அமைப்பின் ஆய்வு கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக, பாதுகாக்கப் படவேண்டிய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு உதவி கிடைக்காமல் போவதாக நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகக் கருத்தரங்கில் TWC2 அமைப்புக் கூறியது.
மனிதவள அமைச்சின் ஒரு பகுதியாக இயங்கும் தொழிலாளர் நீதிமன்றம், சம்பளம், வேலை நீக்கம், சம்பளமுள்ள விடுப்பு போன்றவை குறித்த புகார்களை விசாரணை செய்கிறது. அந்தரங் கமாக நடத்தப்படும் இந்த விசாரணையில் தொழிலாளர்களை அல்லது முதலாளிகளை வழக்கறி ஞர்கள் பிரதிநிதிக்க அனுமதி கிடையாது. தொழிலாளர் நீதிமன் றத்தின் பெயர் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் "வேலை சார்ந்த கோரிக்கை கள் நடுவர் மன்றம்" என மாற்றப்பட்டு, அரசு நீதிமன்றத் தின் கீழ் செயல்படத் தொடங் கியது. தொழிலாளர் நீதிமன்றத் தில் புகார் செய்வதற்குத் தொழி லாளர்கள் $3 செலுத்தவேண்டும்.
வழக்கறிஞர்கள் இல்லாமல் விரைவாகவும் குறைந்த செல விலும் புகார்களை விசாரிப்பது நடுவர் மன்றத்தின் நோக்கமாக இருந்தாலும் வெளிநாட்டுத் தொழி லாளர்களுக்கு நீதி கிடைக்காமல் தடுக்கும் "குறிப்பிடத்தக்க தடங் கல்களும் சமத்துவமற்ற சட்ட நிலைநாட்டலும்" இருப்பதாக TWC2 ஆய்வு கண்டறிந்தது.

