அறப்பணிக்கு $6 மில்லியன் விட்டுச் சென்ற நல்ல மனம் படைத்த தம்பதியர்

அறப்பணிக்கு $6 மில்லியன் விட்டுச் சென்ற நல்ல மனம் படைத்த தம்பதியர்

2 mins read
9ad6ab52-92e9-4f52-b17a-9c2dd826277d
-

தாராள மனம் கொண்ட காலஞ்சென்ற திரு ஜெரி எஸ்ஸரி, திருமதி ஜோ எஸ்ஸரி தம்பதியர், அறப்பணிக்கு $6 மில்லியன் விட்டுச் சென்றுள்ளனர். இந்தத் தொகை அசிசி ஹாஸ்பிஸ் அந்திமக்கால இல்லம், தேசிய சிறுநீரக அறநிறுவனம், விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் (SPCA) ஆகியவற்றுக்குச் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும். திருமதி எஸ்ஸரி சிங்கப்பூரில் பிறந்து, சிலகாலம் இங்கு வாழ்ந்து, இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது தென்னாப்ரிக் காவுக்குச் சென்றவர். திரு எஸ்ஸரி பிரிட்டனில் பிறந்தவர். அவரது அப்பா சிங்கப்பூரில் பொறியாளராகப் பணியாற்றியதால் 1931ல் சிங்கப் பூருக்கு வந்தார்.

ஜப்பானியர் 1942ல் சிங்கப்பூரை ஆக்கிரமித்தபோது, அவரது அப்பா அவரை ஆஸ்திரேலியா வுக்கு அனுப்பி வைத்தார். சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தென்னாப்ரிக்காவுக்குச் சென்று, தனது குடும்பத்தோடு இணைந் தார். அங்குதான் தமது வருங்கால மனைவியை அவர் சந்தித்தார். இருவரும் 1945ல் தென்னாப்ரிக் காவில் திருமணம் செய்து கொண்டனர். பிறகு 1950களில் இருவரும் ஆஸ்திரேலியாவில் குடியேறினார் கள். பின்னர், சிங்கப்பூரிலிருந்த கண்ணாடி உற்பத்தி நிறுவனத்தில் திரு எஸ்ஸரிக்கு வேலை கிடைத்த தால், இருவரும் சிங்கப்பூரில் குடியேறத் தீர்மானித்தனர்.

பிரிட்டிஷ் நாட்டவரான இந்தத் அறப்பணிக்கு $6 மில்லியன் விட்டுச் சென்ற நல்ல மனம் படைத்த தம்பதியர் தம்பதியர், 1970களில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றனர். திரு எஸ்ஸரி ஒரு கணக்காய் வாளர். இல்லத்தரசியான திருமதி எஸ்ஸரி சரளமாக மலாய் பேசுபவராக இருந்தார். அவர் சமூகநலப் பணிகளில் முனைப் புடன் ஈடுபட்டிருந்தார். இருவ ருக்கும் பிள்ளைகள் இல்லை. திருமதி எஸ்ஸரி 2013ஆம் ஆண்டில் 89 வயதில் காலமானார்.

திரு எஸ்ஸரி 2015ஆம் ஆண்டில் 92 வயதில் காலமானார். தம்பதியருடன் 30 ஆண்டுகளுக்கு மேல் பழக்கமுள்ள நெருங்கிய நண்பர் டாக்டர் டான் ஹுவா லக். இவர் ஒரு விலங்கு மருத்துவர். "பணம் சம்பாதிக்க சமுதாயம் துணை புரிந்ததால், சமுதாயத் திற்குத் திருப்பித் தரவேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. குறிப்பாக, உதவி தேவைப்படு வோருக்கு உதவியளித்து, வருங்கால உலகைச் சிறப்பாக்க விரும்பினார்கள்," என்றார் டாக்டர் டான். தேசிய சிறுநீரக அறநிறு வனத்திற்குக் கிடைக்கும் தொகை யைக் கொண்டு மார்சிலிங்கில் புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படும். ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒருவர் சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்படுவதால், தம்பதியர் விட்டுச் சென்ற தொகை தக்க சமயத்தில் தகுந்த உதவி புரிவதாகக் கூறினார் அறநிறு வனத்தின் தலைவர் கோ போ தியோங்.

அறப்பணிக்குப் பெருந்தொகையை விட்டுச் சென்ற தம்பதியர். தங்களது செல்வத்தைத் சமூக நலனுக்கு வழங்க அவர்கள் முடிவெடுத்தனர். படம்: தேசிய சிறுநீரக அறநிறுவனம்